BREAKING NEWS

Sports

Health

sex

Saturday 6 September 2014

யுனிசெப் அறிக்கை - 10 சதவீதம் பெண்கள் கற்பழிப்பு மற்றும் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள்

உலகம் முழுவது சிறுவர் சிறுமிகளின் நிலமை குறித்தும் அவர்கள் பாதுகாப்பு குறித்தும் ஐ.நா.சபையின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) 190 நாடுகளில் எடுத்த புள்ளி விவரங்களின் படி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ள விவரம் வருமாறு:-
 
15 வயதிற்கு முன் பாலியல் வன்முறைக்கு முதல் முறையாக பாதிக்கபட்டவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது.இது போன்ற சம்பவங்கள் லத்தீன் அமெரிக்க,ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அதிகமாக உள்ளது. உலகம் முழுவதும் 12 கோடி சிறுமிகள் தங்கள் 20 வயதிற்குள் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளாகி உள்ளனர்.
 
2012 - கணக்குப்படி 20 வயதிற்குள் பாதிக்கபட்டவர்களில் 5-இல் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் இளம் பெண்கள் பெரும்பாலும் குற்றம் புரிபவர் அவர்களின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து உள்ளனர். அதுபோல் கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் பாதுகாவலர்கள், சிறுமிகள் மீது உடல் ரீதியான வன்முறைகள் புரிந்தவர்களாக உள்ளனர்.
 
2012 கணக்கின் படி பாதிக்கபட்ட பெண்கள் கொலை செய்யப்படுவது அதிகம் உள்ள 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவிறகு 3 வது இடம் முதலிடத்தில் நைஜிரியாவும் இரண்டாவது இடத்தில் பிரேசிலும் உள்ளது.
 
யுனிசெப் அறிக்கைபடி சிறிய குழந்தைகள் மீது இளம் வயதினர் உடல் ரீதியான வன்முறையில் ஈடுபடுவதாக கூறுகிறது.எடுத்து காட்டாக பனாமாவில் பாலியல் வன்முறை ஒரு வயது குழந்தையை கூட விட்டு வைப்பது இல்லை.
 
* உலகில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் கொலையில் எல்சல்வடோர்,குவாத்தமாலா, வெனிசுலா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.
 
* 2012 இல் 95 ஆயிரம் குழந்தைகள் இளம் வயதினர் கொலை செய்யபட்டு உள்ளனர்.
 
* 10 குழந்தைகளில் 6 பேர் தங்கள் 2 முதல் 14 வயதிற்குள் உடல் நீதியாக துன்புறுத்த்பட்டு உள்ளனர்.
 
* சில நாடுகளில் குழந்தைகள் மீதான வன்முறை சமூதாயத்தால் ஏற்றுகொள்ளப்பட்டு உள்ளது.
 
இது குறித்து யுனிசெப் நிர்வாக இயக்குனர் அந்தோணி லேக் கூறியதாவது:-
 
வயது, புவிவியல், மதம் .இனம், மற்றும் வருமானம் என எல்லை கடந்து இந்த வன்முறை நடக்கிறது. வீடுகள் பாட சாலைகள்,சமூகம் எல்லா இடங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் இது இணையம் மூலம் அதிக அளவு நடக்கிறது. குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அண்டை வீட்டுக்காரர்கள், பிற குழந்தைகள் என தீங்கு இழைப்பவர்களாக உள்ளனர். என கூறினார்.

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger