BREAKING NEWS

Sports

Health

sex

Sunday 7 September 2014

பொங்கலா ? தீபாவளியா ?

யிரம்தான் பொங்கலை தமிழர் திருநாள் என்று உரக்கக் கூவி பார்த்தாலும், தீபாவளிக்கு இருக்கிற மவுசு பொங்கலுக்கு இல்லைதான்.
என்ன காரணம்?
முதலாளித்துவமும் பார்ப்பனியமும்தான் காரணம்.
உங்களுக்கு வேற வேலை இல்லையா? எதற்கெடுத்தாலும் பார்ப்பனியம்… முதலாளி…இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க. சரி எப்படி காரணம்?
தீபாவளி கொண்டாடப்படுதற்கு காரணமாக சொல்லப்படுகிற கதைகளில் பல முரண்பாடுகள் இருந்தாலும், அதன் உள்ளடக்கம் முழுக்க முழுக்க பார்ப்பன நலன் அல்லது அதன் உயர்வு சார்ந்ததாக இருக்கிறது.
பார்ப்பனரல்லாதவர்கள் தீபாவளியை தங்கள் பண்டிகையாக விரும்பி விசேஷமாக  கொண்டாடுவதற்கு, மத ரீதியாக பல கவர்ச்சிகரமான மத்தாப்புகள் கொளுத்திப் போடப்படுகின்றன.

சரி. இதுல முதலாளித்துவம் எங்கிருந்து வந்துச்சு?
பார்ப்பனியம் முதலாளித்துவத்தோடு கைகோர்த்து, அதிகார மட்டத்தில் இருப்பதால்தான், தொழிலாளர்களுக்கு ‘போனஸ்’ பொங்கலுக்கு தரமால், தீபாவளிக்கு தரப்படுகிறது. தீபாவளி விசேஷமாக கொண்டாப்படுவதின் 100 சதவீத காரணம் இதுதான். தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முதலாளிகளும், வர்த்தக நிறுவனங்களும் தொழிலாளர்களின் ‘போனசை’ குறிவைத்து தங்களின் விளம்பரங்களின் மூலம் ‘தீபாவளி கொண்டாட்டத்திற்கு’ மக்களை தயார் செய்கிறார்கள். தனது தள்ளுபடி மோசடியையும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.

சரி. அதுக்கு என்ன செய்யிறது?

தீபாவளிக்கு இருக்கிற மவுசை குறைத்து அதை பொங்கலுக்கு கூட்ட வேண்டும் என்றால், தீபாவளிக்கு தருகிற ‘போனசை’ நிறுத்தி, அதை பொங்கலுக்கு  மாற்றவேண்டும்.
மாற்றினால்?
“விழாக்கள், பண்டிகைகள் எல்லாம் முதலாளிகளின் வேட்டை நாய்கள்” என்றார் காரல் மார்க்ஸ். அந்த வேட்டை நாய்கள் எல்லாம் பச்சை தமிழனாக மாறி பொங்கலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே ‘தமிழர் திருநாளை கொண்டாட எங்களிடம் வாருங்கள்’ என்று பொங்க ஆரம்பித்துவிடும்.
அப்புறம் என்ன ஆகும்?
வழக்கம் போல தாழ்த்தப்பட்ட மக்களை தள்ளிவைச்சிட்டு, ‘தமிழர் திருநாள்’ விசேஷமாக கொண்டாடப்படும்.
என்னங்க இது புது கதையா இருக்கு? தாழ்த்தப்பட்ட மக்களை யாருங்க தள்ளிவைச்சா? எதையாவது சொல்லி குழப்பத்தை உண்டு பண்ணிக்கிட்டே இருங்க.
நீங்க என்ன சந்திர மண்டலத்துல இருந்து வந்திருக்கீங்களா? தமிழர்களின் ‘வீர விளையாட்டு’ என்று சொல்லப்படுகிற, ஜல்லிகட்டில் – மாட்டை அடக்குற போட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிப்பதில்லை, என்பது உங்களுக்குத் தெரியாதா?
‘மாட்டுபொங்கல்’ என்று ஒரு நாளை தீர்மானிச்சு, அந்த நாளில் தனக்கு உழைத்தவர்கள் என்கிற அடிப்படையில் மாட்டையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒரே நிலையில் வைத்து ‘மரியாதை’ செய்கிற பழக்கம் என்ன ஜப்பான்காரன் பழக்கமா?

பார்பபனர்களை திட்டுன சந்தோஷபடுறீங்க. உங்க கதையை எடுத்து உட்டா உடனே, நீங்களும் பாப்பனரா மாறிடிறீங்க? என்னங்க நியாயம் இது?

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger