BREAKING NEWS

Sports

Health

sex

Sunday 7 September 2014

லேப்டாப் எனப்படும் மடிக்கணினியைப் பராமரிக்கும் வழி முறைகள்

• குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்களுடைய மடிக்கணினியில் Operating Systemத்தை புதுப்பிக்கவும்.

•மடிக்கணினிக்கு பேட்டரி மிக முக்கியம். பேட்டரியை நன்கு பராமரிக்க வேண்டும். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உங்களுடைய மடிக்கணினியை பயன்படுத்த மாட்டீர்கள் என்ற நிலையில், லேப்டாப்பில் உள்ள பேட்டரியை கழற்றி தனியே வைத்துவிடுங்கள். உதாரணமாக, வெளியூர் செல்லும் நாட்களில்.

•மடிக்கணினிக்கு என தயார் செய்து விற்கப்படும் Laptop Stand மீது வைத்துப் பயன்படுத்தலாம். மடிக்கணினிக்கு என கொடுத்த சார்ஜரையே (Original Laptop Charger) பயன்படுத்த வேண்டும். வேறு தரமில்லாத சார்ஜரைப் பயன்படுத்தினால் வெப்ப மாறுதல், அதிக மின்னோட்டம் (High Power Flow) காரணமாக உங்களுடைய மடிக்கணினி செயலிழந்து போகலாம்.

•மடிக்கணினி பேட்டரியில் உள்ள மின்சாரம் குறைந்து, அதில் Low Battery warning செய்தி தோன்றிய பிறகே மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். அல்லது லோ பேட்டரி சிக்னல் கிடைத்த பிறகே புதியதாக சார்ஜ் செய்ய வேண்டும்.

•மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும்பொழுதே சார்ஜ் செய்வதை கூடுமானவரை தவிர்க்கவும்.

•மடிக்கணினியைப் பொறுத்தவரை, ஒரு சிறிய பிரச்சினை என்றாலும் கூட அதை நாமாகவே சரி செய்ய முயற்சிப்பது தவறு. அதுவே பெரிய பிரச்சினையாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

•ஒரு மடிக்கணினியில் உள்ள பேட்டரியை வேறொரு மடிக்கணினிக்கு மாற்றி பொருத்தி செயல்படுத்தக் கூடாது. ஒரு மடிக்கணினிக்கான பேட்டரியை அதே மடிக்கணினியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்...

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger