பிளே ஸ்டோரை பயன்படுத்தி பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் தனது குழந்தைகள் தெரியாமல் டவுன்லோட் செய்ததற்கு தனது வாடிக்கையாளர்களுக்கு 19 மில்லியன் டாலர்களை திருப்பிக் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளது .
இது போன்று 2011 ஆம் ஆண்டில் இருந்து பல வாடிக்கையாளர்கள் கூகுளிடம் இது குறித்து முறையிட்டுள்ளனர் . குழந்தைகள் விளையாடும் விளையாட்டில் சில பொருட்கள் விற்கும் விளம்பரம் வரும் . அவர்கள் அதை தெரியாமல் அழுத்திவிட்டால் அவர்களின் பெற்றோர்களின் அனுமதில் இல்லாமல் அவர்களுக்கான பில் வந்திடும் . இது போன்ற விளம்பரங்களின் மூலம் 99 சென்ட் முதல் 200 டாலர்கள் வரை வாடிக்கையாளர்கள் இழந்துள்ளனர் .
கூகுள் நிறுவனம் மேலும் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதற்காக பல புதிய வசதிகளை கொண்டு வர இருப்பதாகவும் கூறியுள்ளது . இதேப் போன்று ஆப்பிள் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு 32 மில்லியன் டாலர் இழப்பீடாக தர உள்ளது .
Post a Comment