குமரி மாவட்டத்தில் பாஜக சார்பாக பாரளுமன்ற தேர்தலில் வென்ற மற்றும் மத்திய கனரக தொழில் மற்றும் பொது தொழில் இணை துறை அமைச்சரான பொன் . ராதாகிருஷ்ணன் , குமரி மாவட்டத்தை கேரளாவுடன் இணைக்க நாங்களே முன் நின்று போராடுவோம் என்று நேற்று அளித்த பேட்டியில் கூறினார் .
அவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டார் . அப்போது அவர் அளித்த பேட்டியில் , " இந்துக்கள் சிறுபான்மையினருடன் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் வாழ்ந்து இருந்தால் , குமரி மாவட்டம் கேரளாவில் இருந்து பிரிந்து இருக்காது . திருப்பதியும் தமிழகத்துடனே இணைந்து இருக்கும் . குமரி மாவட்டத்தை கேரளாவுடன் இணைக்க நாங்களே முன் நின்று போராட்டம் நடத்துவோம் . தமிழர் பிரச்சனைகள் பற்றி விவாதம் செய்பவர்களை விட எங்களுக்கு தமிழ் பற்றி அதிகமாகவே உள்ளது . மேலும் இந்திய மீனவர்களை விடுவிக்கவும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை மீட்கவும் அரசு முயற்சி எடுத்து வருகிறது " என்றார் .
Post a Comment