BREAKING NEWS

Sports

Health

sex

Friday 12 September 2014

சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் சட்ட விரோத கிரானைட், மணல் குவாரிகளை ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு



23 ஆண்டுகளில் 23 டிரான்ஸ்பர், 48 மணி நேரத்தில் 2 முறை டிரான்ஸ்பர் என நேர்மையாக அதிகாரி சகாயம் பந்தாடப்படுவது சகஜமான ஒன்று, மதுரை கலெக்டராக இருந்த போது சகாயம் எடுத்த கடும் நடவடிக்கைகளினால் பல்லாயிரம் கோடி கிரானைட் மோசடிகள் வெளியாகின, சகாயம் மதுரையிலிருந்து தூக்கி கோ-ஆப்டெக்ஸ் தலைவராக மாற்றப்பட்டார், அங்கேயும் சிறப்பாக பணியாற்றி கடைசியில் தற்போது பெயர் அறியாத துறையின் தலைவராக உள்ளார்.

இந்நிலையில் டிராபிக் ராமசாமி அவர்கள் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு செய்திருந்தார், அதில் தங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியைத் தாண்டி தமிழ்நாடு முழுவதும் குவாரி உரிமையாளர்கள் பலர் சட்ட விரோதமான முறையில் கிரானைட், மணல் போன்ற கனிம வளங்களை தோண்டி எடுக்கின்றனர் மேலும் அரசு புறம்போக்கு நிலங்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தனியார் பட்டா நிலங்கள் என பல இடங்களில் சட்ட விரோதமான முறையில் கனிம வளங்கள் வெட்டி எடுக்கின்றனர்.

தமிழ்நாட்டில் நடைபெறும் சட்ட விரோத கனிம குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல ஆண்டுகளாக நான் கோரிக்கை விடுத்து வருகிறேன். எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தமிழ்நாடு முழுவதும் செயல்படும் சட்ட விரோத கனிம குவாரிகள் பற்றி ஆய்வு நடத்தி, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமனம் செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர்  தமிழ்நாட்டில் உள்ள கனிம குவாரிகளின் செயல்பாடுகள் பற்றி ஆராய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயத்தை சட்ட ஆணையராக நியமனம் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் ஏற்கெனவே ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளார். எனவே இந்த விவகாரம் குறித்து ஆராய அவரை சட்ட ஆணையராக நியமிப்பதே பொருத்தமானது என நாங்கள் கருதுகிறோம்.என்றும் குறிப்பிட்டனர், சகாயம் கனிம குவாரிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி, குவாரிகளின் செயல்பாடுகள் தொடர்பான அறிக்கையை 2 மாத காலத்துக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவருக்குத் தேவையான உதவிகளை காவல் துறையினரும், அதிகாரிகளும் வழங்கிட வேண்டும்  என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

# லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger