BREAKING NEWS

Sports

Health

sex

Saturday 6 September 2014

கண் சிமிட்டுவது ஏன்

கண்கள் உலர்ந்து போகாமல் இருக்க ஈரம் தேவைப்படுகிறது .கண் இமைகள் தான் கண்கள் உலர்ந்து போவதில் இருந்து தவிர்க்கின்றன.இமைகளின் விளிம்பில் 20-30 வரை சுரப்பிகள் உள்ளன . கண் சிமிட்டும் போதெல்லாம் கண் விழியை இவை அலம்புகின்றன. கண்ணில் தூசு படியும் போது அதனை நீக்கவும் சிமிட்டல் தேவைப்படுகிறது.கண்ணீர் விடும் போது கண் விழியின் மேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வருகிறது.இவைகளை நீக்கவும் கண் சிமிட்டல் தேவைப்படுகிறது.


வேறு காரணங்களும் முன்வைக்கபட்டிருக்கின்றன .ஆனால் அவை இன்னும் விவாதிக்கப்பட்டுகொண்டிருக்கின்றன . இந்த காரணங்களில் ஒன்று கண் அசையும் போது இமைகள் சிமிட்டுவது தொடர்பானது . கூடுதலாக கண் பார்வையின் கவனம் மாறுபடும் போதே அதிகமாக கண் சிமிட்டபடுவதாக கூறப்படுகிறது .அதாவது ஒரு பார்வையில் இருந்து இன்னொரு பக்கம் உங்கள் கவனத்தை திருப்பும் போது . தொடர்ச்சியாக ஒரு திசையில் பார்த்துக்கொண்டே கவனத்தை அப்படியே இன்னொரு திசையில் திருப்புவதை விட புதிதாக ஒரு இடத்தில் கவனம் செலுத்தும் போது கண்களுக்கு இலகுவாக இருக்கலாம் .அதனால் இமைகள் மூடி திறக்கலாம் என்கின்றனர். மூளையில் பார்வையை உள்ளெடுக்கும் பகுதியை மூளை சில மைக்ரோ செக்கன்கள் தடை செய்வதை University College London விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர் .அதாவது இது கண் சிமிட்டல் ஏற்பட எடுக்கும் நேரத்துக்கு சமனான நேரமாகும் .


மேலதிக தகவல்:- ஒரு நபர் சராசரியாக ஒரு நாளைக்கு 10,000 தடவைகள் கண்களை சிமிட்டுகிறார்.சராசரியாக 5 செக்கனுக்கு ஒரு முறை இமைகள் சிமிட்டுகின்றன .ஒரு நிமிடத்துக்கு 5-30 தடவைகள் கண் சிமிட்டப்படுகிறது

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger