BREAKING NEWS

Sports

Health

sex

Friday 28 November 2014

அரக்கோணம்-சென்னை கடற்கரை ரயில்கள் வேளச்சேரி வரை நீட்டிப்பு .


சென்னையில் புதிய மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரக்கோணம்-சென்னை கடற்கரை, சூளூர்பேட்டை-சென்னை கடற்கரை மின்சார ரயில்கள் இனி வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சேவை இன்று முதல் தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேளச்சேரி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள்...

ரயில் எண் 42750: பொன்னேரி - சென்னை கடற்கரை- காலை 7 மணி

ரயில் எண் 43650: ஆவடி - சென்னை கடற்கரை- காலை 7.30 மணி

ரயில் எண் 43932: அரக்கோணம் - சென்னை கடற்கரை- காலை 7

ரயில் எண் 42850: சூளூர்பேட்டை - சென்னை கடற்கரை- காலை 7.25

வேளச்சேரியில் இருந்து திருத்தணி, அரக்கோணம், ஆவடி வரை செல்லும் ரயில்கள்...

ரயில் எண் 43941: காலை 11.20 -வேளச்சேரி - சென்னை கடற்கரை ரயில் திருத்தணிக்கு பிற்பகல் 2.40 மணிக்கு சென்றடையும்.

ரயில் எண் 43931: மாலை 5.15 மணிக்குப் புறப்படும் வேளச்சேரி - சென்னை கடற்கரை ரயில் அரக்கோணம் இரவு 8.05 மணிக்குச் சென்றடையும்.



ரயில் எண் 43651: இரவு 7.30 மணிக்குப் புறப்படும் வேளச்சேரி - சென்னை கடற்கரை ரயில் இரவு 8.10 மணிக்கு ஆவடி சென்றடையும்.

ரயில் எண் 41126: இரவு 8.50 மணிக்குப் புறப்படும் வேளச்சேரி - சென்னை கடற்கரை ரயில் இரவு 10.30 மணிக்கு ஆவடி சென்றடையும்.

வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்படும் ரயில்கள்...

ரயில் எண் 41027: சென்னை கடற்கரை - வேளச்சேரி காலை 8.15 மணி

ரயில் எண் 41031: சென்னை கடற்கரை - வேளச்சேரி காலை 8.35 மணி

ரயில் எண் 41037: சென்னை கடற்கரை - வேளச்சேரி காலை 9.05 மணி

ரயில் எண் 41047: சென்னை கடற்கரை - வேளச்சேரி காலை 9.55 மணி

ரயில் எண் 41052: சென்னை கடற்கரை - வேளச்சேரி காலை 11.15 மணி

ரயில் எண் 41118: சென்னை கடற்கரை - வேளச்சேரி இரவு 7.30 மணி

ரயில் எண் 41126: வேளச்சேரி - சென்னை கடற்கரை இரவு 8.50 மணி

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger