BREAKING NEWS

Sports

Health

sex

Thursday 20 November 2014

ஹோண்டாவின் புதிய ஸ்டன்னர்!!!

பிரபல CBF 125 பைக்கின் புதிய மாடலாக, CB 125F  2015 மாடல் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது ஹோண்டா. உலக அளவில் அதிகம் விற்பனையாகும் 125சிசி பைக்குகளில் ஒன்று, ஹோண்டா CBF 125. இந்தியாவில் ஸ்டன்னர் என்ற பெயரில் விற்பனையாவது இந்த பைக்தான். வெளிநாட்டுச் சந்தைகளுக்காக, புதிய CB 125F பைக் அறிமுகமாகி இருப்பதால், இந்தியாவிலும் புதிய ஸ்டன்னராக இது விற்பனைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. 


பழைய ஸ்டன்னர் பைக்கைவிட, பக்குவப்பட்ட டிஸைனைக் கொண்டுள்ளது புதிய மாடல். இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் டிஸைன் மிரட்டல் ரகம். 
 புதிய CB 125F பைக்கின் ஃப்ரேம், கையாளுமையை இன்னும் முன்னேற்றியிருக்கிறது. மேலும், வீல்களின் சைஸ் 17 இன்ச்-ல் இருந்து 18 இன்ச் ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. முன்பக்கம் 240 மிமீ டபுள் பிஸ்டன் கேலிபர் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 130 மிமீ டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. பைக்கின் எடை 129 கிலோ.


ஹோண்டாவின் 2015 மாடல் CB 125F பைக், வெளிநாடுகளில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷனுடன் 124.7 சிசி இன்ஜினைக் கொண்டுள்ளது. புதிய சிலிண்டர் ஹெட்டுடன், பேலன்சர் ஷாஃப்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளதால், பைக்கின் அதிர்வுகள் குறைந்திருக்கின்றன. 
 பழைய பைக்கில் 11.1 hp பவர் இருக்க, புதிய பைக்கில் 10.5 hp பவர் மட்டுமே. டார்க்கும் பழைய பைக்கைவிட சற்று குறைவுதான். இந்த ரீ-டியூனிங் வேலையால், பைக்கின் திராட்டில் ரெஸ்பான்ஸ் கூடியிருக்கிறது என்கிறது ஹோண்டா. ஆனால், பைக்கின் மைலேஜில் நல்ல முன்னேற்றம். லிட்டருக்கு சுமார் 52 கி.மீ மைலேஜை அளிக்கிறதாம்.
 இந்தியாவில் இதே பைக் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, குறைவான விலையில் புதிய ஸ்டன்னர் பைக்காக அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பத்துக்குப் பதிலாக, கார்புரேட்டர் பொருத்தப்பட்டுதான் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். ஏற்கெனவே விற்பனையாகிக் கொண்டிருக்கும் CB ஷைன் பைக்குக்கும் வயதாகிக்கொண்டிருப்பதால், இதே பைக்கை புதிய ஷைன் பைக்காக இங்கு விற்பனைக்குக் கொண்டுவரும் வாய்ப்பும் இருக்கிறது. 

இந்தியாவில் இதே பைக் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, குறைவான விலையில் புதிய ஸ்டன்னர் பைக்காக அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பத்துக்குப் பதிலாக, கார்புரேட்டர் பொருத்தப்பட்டுதான் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். ஏற்கெனவே விற்பனையாகிக் கொண்டிருக்கும் CB ஷைன் பைக்குக்கும் வயதாகிக்கொண்டிருப்பதால், இதே பைக்கை புதிய ஷைன் பைக்காக இங்கு விற்பனைக்குக் கொண்டுவரும் வாய்ப்பும் இருக்கிறது. 

Related Keywords  :Latest news, breaking news, india news, indian  , current headlines, indian   news, news online, news headlines, live news, latest headlines, india latest, latest news online, breaking news online, latest news headlines, live news online, latest current headlines, latest breaking headline, latest news live, live news online, current headlines online, hot topics, videos, science technology, lifestyle, world, business, photos, entertainment, auto, travel, semi columns, today's paper, indian   opinion, 

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger