BREAKING NEWS

Sports

Health

sex

Wednesday 10 September 2014

செப்டம்பர் 11, அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நினைவு நாள், தமிழீழத்துக்கு ஏற்பட்ட இழப்பு


9/11 என்று சொல்லப்படும் செப்டம் 11ம் நாளை யாராலும் மறக்க இயலாது, ஆம் அல்கொய்தா தீவிரவாத குழுவினால் அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் ஆன இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டு 5000 பேருக்கு மேல் பலியானார்கள். இதையடுத்து இதில் தொடர்புடைய அல்கொய்தா இயக்கத்தை அழிக்க அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மேல் போர் தொடுத்தது, அல்கொய்தா தலைவர் பின்லேடனுக்கு ஆதரவளித்த தாலிபான் இயக்கத்தை ஒழித்து கட்டி தன் கைப்பாவை அரசை நிறுவியது, இதையடுத்து ஈராக்கிலும் சதாம் உசேன் இரசாயன ஆயுதங்கள் வைத்திருப்பதாக  கூறி போர் தொடுத்து ஈராக்கிலும் பொம்மை அரசை நிறுவி சதாமை தூக்கிலிட்டார்கள்.

அல்கொய்தாவின் இரட்டை கோபுர தீவிரவாத தாக்குதலுக்கு பின் உலக நாடுகள் விடுதலை இயக்கங்களை தீவிரவாதிகளாக பார்க்க ஆரம்பித்தது, இதில் அதிகம் பாதிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் இயக்கம், செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின் விடுதலைப்புலிகளை அமெரிக்கா, ஐரோப்பா, கனடா நாடுகள் தடை செய்தன, இதுவே 2009ம் ஆண்டில் ஈழத்தில் நடைபெற்ற தமிழ் இனஅழிப்புக்கும் புலிகளின் தோல்விக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால் சுதந்திர தமிழீழத்திற்கான வாய்புகள் அழிந்து போயிருக்காது.

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger