- இந்தியாவின் முதல் இரயில் 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி பாம்பே முதல் தானே வரை சென்றது .
- இந்திய இரயில்வேயின் மாஸ்காட் பெயர் போலு . அது ஒரு யானை வடிவில் இருக்கும் .
- இந்தியாவில் உள்ள இரயில்வே டிராக்குகள் அனைத்தையும் பூமத்திய ரேகை மீது சுற்றினால் அது பூமத்திய ரேகையை ஒன்றரை தடவை சுற்றி விடும் .
- மேட்டுப்பாளையம் ஊட்டி பாசெஞ்சர் இரயில் தான் இந்தியாவின் மிக குறைந்த வேகத்தில் செல்லும் இரயில் . இது மணிக்கு 10 கிமீ வேகத்தில் தான் செல்லும் .
- இந்தியாவில் உள்ள அனைத்து இரயில்களும் தினமும் மூன்றரை தடவை நிலவுக்கு செல்லும் தூரம் பயணிக்கிறது .
- 16 இலட்சம் பணியாளர்களை கொண்ட இந்தியன் இரயில்வேஸ் தான் உலகில் 9 வது அதிக பணியாளர்களை கொண்ட நிறுவனம் .
- ஹவ்ரா - அம்ரிசர் எஸ்பிரஸ் 115 நிறுத்தங்களைக் கொண்டது . இது தான் அதிக நிறுத்தங்களை கொண்ட எஸ்பிரஸ் இரயில் ஆகும் .
- இந்திய இரயில்கள் அனைத்தும் தினமும் 250 இலட்சம் பயணிகளை கொண்டு செல்கிறது . இது ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் .
- உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோராக்பூரில் தான் உலகில் மீக நீளமான பிளாட்பாரம் உள்ளது .
- குஹாடி - திருவனந்தபுரம் எஸ்பிரஸ் தான் அதிக நேரம் தாமதாமாக வரும் . இந்த ரயில் சராசரியாக 10 - 12 மணி நேரம் தாமதமாக வரும் .
Saturday, 6 September 2014
இந்தியன் இரயில்வே குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ருசிகர தகவல்கள் !!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment