BREAKING NEWS

Sports

Health

sex

Monday 6 October 2014

தமிழகத்தில் 60,000 ஆண்டுகள் பழமையான மனிதன்!

இந்தியா என்னும் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டைச் சேர்ந்த விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத் திருக்கின்றது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்.  ராமஸ்வாமி பிச்சப்பன் மற்றும் சில இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மதுரையில் இருந்து சுமார் அய்ம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோதிமாணிக்கம் என்ற சிறிய குக்கிராமத்தில் வாழ்ந்து வரும் இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆப்ரிகாவிலிருந்து இந்தியாவிற்கு குடி பெயர்ந்த பூர்வகுடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர்.
‘‘M130’’  எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமை யானது!. இதே ரக மரபணு கொண்ட மலை வாழ் மக்கள் இன்றும் ஆஸ்திரேலிய காடுகளில் வாழ்ந்து வருகின்றனர்!.
இப்போதைக்கு இந்தியாவில் இவருடைய மரபணு மட்டுமே பழமையானது. “THE STORY OF INDIA”  என்ற தலைப்பில்  “Michael Wood ”     என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர்  தொலைக்காட்சியில் இந்தத் தகவலை வெளியிட் டுள்ளார்.
உலகிற்கே தெரிந்த இந்த தமிழனைப்பற்றிய செய்தி, எத்தனை தமிழர்களுக்கு தெரிந்திருக்கும் என்பது கேள்விக்குறியானது.

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger