BREAKING NEWS

Sports

Health

sex

Tuesday 18 November 2014



தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா...?

தாடி வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை வைத்திருப்பார்கள். நம் ஊர்களில் பெரும்பாலானவர்கள் காதலில் தோல்வியுற்றால் தாடி வளர்ப்பார்கள். இருந்தாலும் இப்போதெல்லாம் நிறையப் பேர் ஸ்டைலுக்காகவே தாடி வளர்த்து வைத்திருக்கிறார்கள். தாடிகளில் மயங்கும் பெண்களும் உண்டு என்பது கூட உண்மை தான்! இப்படி தாடி வளர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று கூறப்படுகிறது. இப்போது தாடி வளர்ப்பதால் கிடைக்கும் 6 உடல் நல நன்மைகள் குறித்துப் பார்ப்போமா...!


1.சமீபத்திய ஆய்வின்படி, சூரியனிலிருந்து வரும் 95 சதவீத புறஊதாக் கதிர்கள் நம் சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு நம் தாடி பாதுகாக்கிறதாம். இதனால் தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரும புற்றுநோயின் தாக்கம் குறைவாக உள்ளதாம்.

2.தூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத் தடுப்பதில் அல்லது ஃபில்ட்டர் செய்வதில் தாடியின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இதனால் ஆஸ்துமாவையும் தவிர்க்க முடிகிறதாம்!

3.தாடி வளர்த்திருப்பதால், சூரியனின் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதால், தாடி இல்லாதவர்களை விட நீண்ட ஆண்டுகளுக்கு இளமையான தோற்றத்துடனே இருக்கலாமாம். தாடி ஒரு வயோதிகத் தோற்றத்தை வேண்டுமானால் கொடுக்கலாம்; ஆனால், உண்மையில் தாடி வைத்திருப்பவர்கள் இளந்தாரிகள் தான்!

4.தாடி வைத்திருப்பதால் குளிரை அதிகம் தாங்கிக் கொள்ள முடியுமாம். எவ்வளவுக்கு எவ்வளவு தாடி அடர்த்தியாக உள்ளதோ, அந்த அளவுக்கு அது குளிருக்கு இதமானதாக இருக்குமாம்.

5.பாக்டீரியா உள்ளிட்ட நோய்த் தொற்றுக்களைக் குறைப்பதற்கு தாடி மிகவும் உபயோகமாக இருக்கிறது. சுத்தமாக ஷேவ் செய்திருப்பவர்களை இந்த நோய்த் தொற்றுக்கள் எளிதாகத் தொற்றிக் கொள்ளுமாம்

6.தாடி வைத்திருப்பதால் உலர்ந்த சருமம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது குளிர்ந்த காற்றையே எப்போதும் தக்க வைத்துக் கொண்டிருப்பதால், சருமம் பாதுகாக்கப்படுகிறது. இதனால், தாடி இருந்தாலும் எப்போது முகம் ஜிலுஜிலுவென்றுதான் இருக்கும்


Related keywords: Natural Health Tips, Quick Health Tips for Men, Women & Kids, Good Health Tips, Daily Health Tips, Natural Health Tips, Quick Health Tips, Health Tips For Men,

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger