BREAKING NEWS

Sports

Health

sex

Tuesday 18 November 2014


இ ஆர் சி டி சி கோரிக்கை : அதிக கட்டணம் வசூலிக்கும் அஜென்டுகள் மீது புகார்  கொடுக்கலாம்   

டிக்கெட் அளிக்கும் ஏஜென்டுகள் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் செய்யுமாறு இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளது. ரயில்வே விழிப்புணர்வு வாரம் என்ற பெயரில் ஐஆர்சிடிசி, பயணிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பயணிகளுக்கு ஐஆர்சிடிசி சார்பில் அனுப்பப்பட்டுள்ள இ-மெயிலில் எதையெல்லாம் பயணிகள் செய்ய வேண்டும், செய்ய கூடாது என்பது குறித்த முழு விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதிலுள்ள சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு

சொந்த ஐடி டிக்கெட்டுகள்:
பயணிகள் தங்களது சுய இமெயில் முகவரியில் இருந்து எடுக்கும் டிக்கெட்டுகள் என்றால், அது ஸ்லீப்பர் கிளாஸ் என்றால், ஒரு டிக்கெட்டுக்கு ரூ.10ம், ஏசி வகுப்புகளாக இருந்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20ம் வசூலிக்கப்படும். எத்தனை பயணிகள் என்பது முக்கியமில்லை. டிக்கெட் அடிப்படையில்தான் இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணமில்லை:
அதேபோல ஐஆர்சிடிசி-யால் அங்கீகரிக்கப்பட்ட சில்லரை சேவை வழங்குநர்களிடம் (ஆர்எஸ்பி) டிக்கெட் எடுத்தால் படுக்கை வசதி கொண்ட டிக்கெட் என்றால் ரூ.20ம், ஏசி வகுப்புகளுக்கு ரூ.40ம் ஒரு டிக்கெட்டுக்கான கூடுதல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பேமென்ட் கேட்வே கட்டணம் (டிக்கெட் விலையில் அதிகபட்சமாக 1.8 சதவீதம் மட்டும்) சேர்த்துக்கொள்ளப்படலாம். இதுவும் கூட எத்தனை பயணிகள் என்ற கணக்கில் வசூலிக்கப்படாது. எத்தனை டிக்கெட் என்பது மட்டுமே கணக்காகும்.
புகார் தர இ-மெயில்கள்:
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாக பயணிகளிடம் வசூலிக்கும் ஏஜென்டுகள் குறித்து பயணிகள் உடனடியாக புகார் தர தயங்க வேண்டாம். புகார் அளிப்பது மிகவும் எளிது. இ-டிக்கெட் நகலுடன், ஏஜென்ட் அளித்த பண ரசீது ஆகியவற்றை இணைத்து, agentcomplaint@irctc.co.in அல்லது cvo@irctc.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

கடும் நடவடிக்கை:
தவறு கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், அந்த ஏஜென்டுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம், அதிகப்படியான தொகையில் இருந்து இரட்டிப்பு அபராதம் வசூலிக்கப்படுவதுடன், பயணிக்கும் கூடுதல் தொகை திருப்பி அளிக்கப்படும்.மேலும், ஏஜென்டின் உரிமம் ரத்து செய்யப்படவும், பிளாக் லிஸ்டில் வைக்கவும் நடவடிக்கை உண்டு. ஏமாற்றுவேலை செய்ததற்காக சட்டப்படியாகவும் அவர் மீது வழக்கு தொடரப்படும்.

செல்போன் நம்பர் அவசியம்:
மேலும், டிக்கெட் புக் செய்யும்போது, பயணிகள் கண்டிப்பாக தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்யவும், பண ரசீதை கேட்டு பெறவும் தவறக்கூடாது.

சட்டப்படி குற்றம்:
சொந்த ஐடியில் இருந்து எடுக்கும் டிக்கெட்டுகளை பிறருக்கு விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். அந்த டிக்கெட் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ரத்து செய்யப்படும். இவ்வாறு இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
Related keywords : latest news, breaking news, india news, indian  , current headlines, indian   news, news online, news headlines, live news, latest headlines, india latest, latest news online, breaking news online, latest news headlines, live news online, latest current headlines, latest breaking headline, latest news live, live news online, current headlines online, hot topics, 

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger