BREAKING NEWS

Sports

Health

sex

Thursday 26 March 2015

“மோதினால் பெரிய நாடே அழியும்” 37000 கி.மீ. வேகத்தில் பூமியைக் கடக்கும் ராட்சத விண்கல்

வாஷிங்டன்,

1000 மீட்டர் அகலம் கொண்ட ராட்சத விண்கல் நாளை வெள்ளிக்கிழமை பூமிக்கு மிகஅருகில் கடக்க உள்ளதாக அமெரிக்காவின் நாசா வின்வெளி ஆராய்ச்சி நிலைய ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். ராட்சத விண்கல்லானது மணிக்கு 37000 கி.மீ. வேகத்தில் பூமியைக் கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

'2014 ஒய்.பி.35' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள விண்கல்லானது, பூமியை நெருங்க 4,473,807 கிலோ மீட்டர்களை கடந்து பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  37 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பாய்ந்து வரும் இந்த விண்கல்லானது, பூமியின் மீது மோதினால் ஒரு நாட்டையே அழித்துவிடக் கூடிய அளவுக்கு ஆபத்தானதாக  இருக்கும் என்று கூறப்படுகிறது. மிகவும் நெருக்கமாக வரும் இந்த விண்கல் பூமியின் மீது மோதினால், பருவநிலை மாற்றம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பாதிப்புகளும் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.  

1000 மீட்டர் அகலம் கொண்ட ராட்சத விண்கல் மோதினால் மிகப்பெரிய பாதிப்பு இருக்கும். கடந்த 1908ம் ஆண்டு சைபீரியாவின் துங்குஸ்காவில் விண்கல் விழுந்ததில் ஏற்பட்ட பாதிப்பைவிட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சைபீரியாவில் விண்கல் மோதியது இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் அப்போது உணரப்பட்டது. விண்கல் மோதியபோது 80 மில்லியன் மரங்கள் அழிந்தது, சுமார் 5.0 அளவில் அதிர்வு காணப்பட்டது. துங்குஸ்காவில் விழுந்த விண்கல் 50 மீட்டர் ஆழத்துக்குப் பள்ளம் ஒன்றை ஏற்படுத்தியது. இதைவிட '2014 ஒய்.பி.35' விண்கல்லின் பாதிப்புகள் மிக அதிகளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக பக்கிங்ஹாம்ஷைர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பில்நேப்பியர் டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “துங்குஸ்கா போன்ற நிகழ்வுகள் எல்லாம் சிறியதுதான், பதிப்பு உண்மையில் மிகவும் ஆபத்தானது. அப்போது நாம் இதுபோன்ற விண்கல்களை அடையாளம் கண்டுக் கொள்ளவில்லை. எனவே நாம் பாதிப்பை சம்மாளிக்க தயார்படுத்திக் கொள்ளாமல் இருந்தோம். ஆனால் ‘2014 ஒய்.பி.35' போன்ற விண்கற்கள் உலக அளவில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் நிகழ்வுகளை தடுக்கவும் ஏதோ ஒன்று உள்ளது. விண்கற்கள் பூமியில் மோதுவது என்பது ஒரு அரிதான நிகழ்வுதான். இருப்பினும், விண்கற்கள் ஏற்படுத்தும் ஆபத்துகளை நாம் சாதாரணமாக நினைத்துவிட முடியாது.”  என்றார். 

பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விண்கற்கள், மிகவும் அருகே வரும்நிலையில் எச்சரிக்கையை ஏற்படுத்துகிறது. ஆனால், பூமிக்கு அருகே விண்கற்கள் வருகிறது என்பது, பூமிக்கு பாதிப்பு ஏற்படுத்துவது என்று பொருள் ஆகாது, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய போன்ற எச்சரிக்கை உள்ளது என்பதே பொருள் என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விண்கற்கள் பூமியை நெருங்கி செல்வது என்பது வழக்கமான ஒன்றாகும். 

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger