BREAKING NEWS

Sports

Health

sex

Sunday 12 April 2015

மாணவனுடன் ஆசிரியை மாயம் ; பேஸ் புக்- வாட்ஸ் அப்பில் பர..பர..

திருநெல்வேலி : நெல்லையில் ஒரு பள்ளியில் பயின்ற மாணவனும், ஆசிரியையும் ஒரே நேரத்தில் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அவர்களை குறித்து தவறான படங்களும், கேலி பேச்சுக்களும் பேஸ்புக், வாட்ஸ் அப்களில் உலா வந்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. நெட் நண்பர்கள் பலரும் இந்த சம்பவத்தையே பேசி வருகின்றனர். ' இது செம்மரக்கடத்தல் ' என்பது அதில் ஒரு கமென்ட்.
திருநெல்வேலி, செங்கோட்டை, காலங்கரை பகுதியை சேர்ந்த இளம் ஆசிரியை ( வயது 24 ) . எம்.எஸ்.சி.,பட்டதாரி. செங்கோட்டையை அடுத்துள்ள, இலத்தூரில் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நாளில் பள்ளிக்கு சென்ற ஆசிரியை காணவில்லை என அவரது தந்தை , செங்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் ( வயது 16 ) , கடையநல்லூர், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர். இந்த மாணவனையும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்த தினத்தில் காணவில்லை என அவரது தாயார் கடையநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். இருவரும் காணாமல் போனது குறித்து செங்கோட்டை, கடையநல்லூர் போலீசார் விசாரித்துவருகின்றனர். மாணவன் வீட்டில் இருந்த ரொக்கப்பணம், நகைகளுடன் தலைமறைவாகியிருக்கலாம் என தெரிகிறது. ஒரே நேரத்தில் ஆசிரியையும், மாணவனும் கிளம்பி சென்றதால் இருவருக்கும் காதல் எனவும் ஒருவரை மற்றவர் கடத்திச்சென்றுவிட்டதாக பரபரப்புஎழுந்துள்ளது. ஆனால் இருவரும் சேர்ந்து சென்றதை யாரும் பார்த்ததாக தகவல் இல்லை.



வாட்ஸ்அப் படங்கள்: காணாமல் போன ஆசிரியை , மாணவன் ஆகியோரது படங்கள் போலீசாரிடம் உள்ளது. ஆனால் சமூகவலைத்தளங்களில் வெளியாகிய ஒரு படத்தில், ஒரு மாணவன், ஒரு ஆசிரியை வகுப்பறையிலேயே தூக்கிவைத்திருப்பது போன்ற காட்சி உள்ளது. அந்த ஆசிரியையின் படங்களும் வெளியாகின. இந்த பரபரப்பு முடிவதற்குள், இன்று காலையில் இதே ஆசிரியை, மாணவன் குறித்து புதிய அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகியுள்ளன.


மாணவன் காயத்துடன் சிகிச்சை பெறுவது போல ஒரு படமும், ஒரு இரும்பு பெட்டிக்குள் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது போலவும் படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆசிரியையும் இரும்புபெட்டிக்குள் கொலை செய்யப்பட்டு கிடக்கும் படங்களும் வாட்ஸ்அப்களில் பரப்பப்படுகிறது.



ஆனால் காணாமல் போன ஆசிரியை , மாணவன் , இவர்கள் அல்ல என தெளிவாக தெரிகிறது. இருப்பினும் ஊர்வாயை மூட முடியாது என்பதைப்போல வாட்ஸ்அப்பிலும், பேஸ்புக்கிலும் தங்களுக்கு தெரிந்த கட்டுக்கதைகளை பரப்பிவிடுகின்றனர். இருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கும் படங்கள் அரியானாவில், சோனிபட் மாவட்டத்தில் உள்ள பகல்கர்ட் என்ற நகரின் பூங்கா ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட படங்கள் என தௌிவாக தெரியவருகிறது. 

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger